அச்சுறுத்தும் ஆட்டோமேஷன்... வேலையைத் தக்கவைக்கும் வழிகள்! | Retention ways of automation threatening jobs - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/04/2019)

அச்சுறுத்தும் ஆட்டோமேஷன்... வேலையைத் தக்கவைக்கும் வழிகள்!

.டி துறையில் ஆட்டோமேஷன் அடியெடுத்து வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் பணியாளர்களின் வேலைவாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் ஒரு வேலை சீக்கிரமாக முடிய வேண்டும் என்றால், அந்த வேலையை நான்கு பேருக்கு பிரித்துக் கொடுத்தால்தான் சீக்கிரமாக முடியும். ஆனால், நான்கு விதமான வேலைகளை ஒரே ஆள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய சூழ்நிலை. அப்போதுதான்  அவரால் அலுவலகத்தின் ஆட்டோமேஷன் நடவடிக்கை களிலிருந்து தப்பிக்க முடியும். இதற்கான வழிமுறைகள் என்ன என்பதை மனிதவள மேலாளரான ஸ்ரீ.லக்ஷ்மியிடம் கேட்டோம்.

“ஒரு நிறுவனம் ஆள்குறைப்பு செய்யும்போது நீங்கள் கடைசி ஆளாக இருக்க வேண்டும். ஒரு நிறுவனம் பதவி உயர்வுக்குப் பணியாளர்களைப் பரிசீலிக்கும்போது நீங்கள் முதல் ஆளாக இருக்க வேண்டும் என்பார்கள். இதற்கு நம்மிடம்  பன்முகத் திறமையை வளர்த்துக்கொள்வது அவசியம். இதற்கு முதற்கட்டமாக, ஏற்கெனவே செய்துவரும் வேலையின் நுணுக்கங்கள் அனைத்தையும் நாம் கற்றுக்கொண்டுவிட்டோமா என்பதை ஒருமுறைக்கு இரண்டுமுறை ஆராய்ந்து பார்த்துவிடுவது நல்லது. ‘நமக்குத் தெரியாதது இந்த உலகத்தில் என்ன இருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டு, புதிதாக எதுவுமே கற்றுக் கொள்ளாமல் இருந்துவிடக்கூடாது.

அதிகம் படித்தவை