கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும் 5 காரணங்கள்! | Five reasons for affecting credit scores - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/04/2019)

கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும் 5 காரணங்கள்!

ட்சம் லட்சமாகச் சம்பாதித்தாலும், ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர்தான் அவருக்குக் கடன் வாங்கும் தகுதியைத் தீர்மானிக்கிறது. கடன் கேட்டு வங்கியை யார் அணுகினாலும், வங்கிகள் முதலில் பார்ப்பது கடன் கேட்டு வருகிறவருக்கு கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு இருக்கிறது என்பதைத்தான். அதன்பிறகுதான், அவர் சம்பளதாரரா, தொழில்முனைவோரா, மாத வருமானம் எவ்வளவு, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தகுதியானவரா என்பதையெல்லாம் பார்ப்பார்கள்.

பொதுவாக, வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பலர் தவறான அணுகுமுறையைக் கையாள்கிறார் கள். இதனால் அவர்களின் கிரெடிட் ஸ்கோர் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் 300-900 என்கிற அளவில்  இருக்கும். ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் 750-க்குமேல்  இருந்தால், அவருக்கு சுலபமாகக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.  ஆனால், 750-க்குக்  குறைவாக இருக்கும் பட்சத்தில்தான், கடன் தருவதற்கான கிரெடிட் ரிப்போர்ட் பரிசோதிக்கப்படும். ஒருவருடைய கிரெடிட் ஸ்கோரில்  கடனைத் திருப்பிச் செலுத்திய விவரங்கள் தொடர்பாக 35%,  தற்போது இருக்கும் கடன்களுக்கு 30%, தற்போது இருக்கும் கடன் வகைகள் தொடர்பாக 10%, முந்தைய கடன் விவரங்கள் தொடர்பாக 15%, புதிதாக விண்ணப்பித்திருக்கும் கடன்களுக்கு 10% என்கிற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.