பி.எஃப் அளவை உயர்த்துவதில் என்னென்ன சிக்கல்கள்? | EPF interest rate hiked What are the problems? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/04/2019)

பி.எஃப் அளவை உயர்த்துவதில் என்னென்ன சிக்கல்கள்?

னியார் ஊழியர்களுக்கான வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் ரூ.15,000 என்ற வருமான உச்சவரம்பை நீக்கிய கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், 2014-ம் ஆண்டுக்குப்பிறகு இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர்களும் இந்தத் திட்டத்தின் பயனை அனுபவிக்கலாம் எனக் கூறியுள்ளது.

இந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் தனியார் ஊர்களுக்குக் கிடைக்கும் பென்ஷன் தொகை அதிகரிக்குமா என என நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம். அவர் விரிவாக விளக்கினார்.

``இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ளும்முன், முதலில் நடைமுறையில் இருக்கும் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தைப் பார்ப்போம். மாதச் சம்பளம் என்பது, அடிப்படை வருமானம் மற்றும் கருணைத்தொகை இரண்டும் இணைந்தது. தற்போதுள்ள திட்டப்படி, பணியாளர்கள் தரப்பிலிருந்து 12% முழுமையாக வருங்கால வைப்புநிதித் திட்டத்துக்குச் சென்றுவிடுகிறது.  நிறுவனத்தின் தரப்பிலிருந்து தரப்படும் 12% தொகையில் 8.33% பென்ஷன் திட்டத்துக்கும், 3.67% வருங்கால வைப்பு நிதிக்காகவும் சேமிக்கப்படுகிறது. இதற்கு அதிகபட்ச வருமான வரம்பாக ரூ.15,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.