கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி | Commodity trading Metal and oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் & அக்ரி

தங்கம் (மினி)

தங்கம், வலிமையான அடுத்தகட்ட நகர்வுக்குத் தயாராகிறதா? இப்படி ஒரு கேள்வி தோன்றுகிறது. பங்குச் சந்தை ஒரு உச்சத்திற்கு அருகில் தொட்டுத் தொட்டு தாண்ட முடியாமல் இருப்பதும், சென்ற வாரம் வெள்ளியன்று பெரும் இறக்கத்தைக் கண்டதும், தங்கத்திற்குச் சாதகமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

பொதுவாக, தங்கத்தின் ஏற்றமானது மற்ற பொருளாதாரம் சார்ந்த காரணிகள் எல்லாம் ஒரு நிச்சயமற்ற தன்மையில் இருக்கும்போது அபரிமிதமாக இருக்கும். தற்போது உலகப் பொருளாதார வளர்ச்சியானது முன்பு கணித்ததைவிட இன்னும் குறைவாகத்தான் வளரும் என்று உலக வங்கி கணித்திருப்பது, தங்கத்திற்குச் சாதகமாக இருக்கலாம்.