தர்மபுரியில் நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா கேப்பிடல் நிறுவனங்கள் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்’ என்ற விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது.
முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்டின் தமிழ்நாடு மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
சுவாமிநாதன் கருணாநிதி பேசும்போது, ‘‘மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள், தங்களின் தேவையைத் தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்யவேண்டும். ஒரு கடைக்குப் போனாலே இந்தப் பொருளைத்தான் வாங்க வேண்டும் என்கிற நோக்கம் நமக்கிருக்கும். ஆனால், முதலீடு என்று வரும்போது ஏன் எதற்கு என்கிற தெளிவில்லாமலேயே முதலீடு செய்கிறோம். இதைத் தவிர்க்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் நல்ல லாபம் தரவில்லை. ஆனாலும், அதில்தான் அதிக முதலீடு செய்கிறோம். முப்பது ஆண்டுகளுக்கு தினம் 50 ரூபாயை முதலீடு செய்து, அதற்கு 12% வருமானம் கிடைத்தால், பல லட்சம் ரூபாயை நம்மால் சேர்க்க முடியும்’’ என்றார்.