வரியைச் சேமிக்க உதவும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்! | ELSS: An ideal investment for tax saving - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)

வரியைச் சேமிக்க உதவும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்!

ருமான வரியைச் சேமிப்பதற்காக எந்தெந்த முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் எனப் பலரும் ஆராயக்கூடிய காலகட்டம் இது. வரிச் சேமிப்பு தரும் முதலீடுகளில் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் முதலீடும் ஒன்று.

நம் நாட்டில் மிகக் குறைவான லாக்இன் இருக்கக்கூடிய ஒரு முதலீடு என்றால் அது இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் முதலீடுதான். இதில் மூன்றாண்டு காலம் லாக்இன் செய்து, பிறகு பணத்தை எடுத்துக்கொள்ளலாம். என்றாலும், குறைவான லாக்இன் என்கிற ஒன்றை மட்டுமே பார்க்காமல்,  இ.பி.எஃப், பி.பி.எஃப், பேங்க் டெபாசிட் என இவற்றில் சரியான அளவுக்கு அவரவர்கள் ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பொறுத்து முதலீடு செய்யவேண்டியது அவசியம்.

மற்ற முதலீடுகளைக் காட்டிலும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் தரும் வருமானம் அதிகம். மூன்று அல்லது ஐந்து வருட காலத்தில், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் 11.5 முதல் 16% வரை வருமானம் கொடுத்திருக்கிறது. அதேவேளையில், அதிகபட்சமாக இந்த வகை ஃபண்டுகள் 19% வருமானம் தந்திருக்கிறது. ஐந்தாண்டு காலத்தில் 17% வருமானம் கொடுத்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க