எல் & டி பைபேக் மறுப்பு... முதலீட்டாளர்களுக்குப் பாதிப்பா? | Will L&T buyback rejection affect investors? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)

எல் & டி பைபேக் மறுப்பு... முதலீட்டாளர்களுக்குப் பாதிப்பா?

ந்தியாவின் மிகப் பெரிய உள்கட்டமைப்பு நிறுவனமான லார்சன் & டூப்ரோ (எல் & டி)நிறுவனம் ரூ.9,000 கோடி மதிப்பிலான பங்கு களைத் திரும்பப் பெறத் திட்டமிட்டு, செபியிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால், அந்தத் திட்டத்திற்கு அனுமதி தர செபி மறுத்துவிட்டது. எல் & டி போன்ற பாரம்பர்யமிக்க நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க செபி மறுத்தது முதலீட்டாளர்களிடையே பெரிய அளவில் ஆச்சர்யத்தையும் அளித்திருக்கிறது.

எல் & டி நிறுவனத்தின் பைபேக் செய்யும் திட்டத்தை செபி மறுக்க என்ன காரணம்?

எல் & டி நிறுவனத்தின் வருமானம் கடந்த பத்து ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு இதன் வருமானம் ரூ.40,332 கோடி. இது கடந்த 2018-ல் ரூ.1,19,683 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதேபோல, நிகர லாபமும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. 2009-ல் இதன் நிகர லாபம் ரூ.3,790 கோடி; 2018-ல் நிகர லாபம் 7,370 கோடியாக உயர்ந்திருக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நிறுவனம் குறிப்பிட்ட அளவு டிவிடெண்ட்டும் தந்தி ருக்கிறது. 2009-ல் ரூ.615 கோடி டிவிடெண்ட் தந்தது; கடந்த ஆண்டில் ரூ.2,242 கோடியாகத் தந்திருக்கிறது.

கடந்த 2009-ல் ரூ.390-ஆக இருந்த இந்தப் பங்கின் விலை, கடந்த அக்டோபரில் பைபேக் அறிவிப்பதற்குமுன் இதன் விலை ரூ.1,324-ஆக இருந்தது. எல் & டி-யின் நிதிநிலை நன்றாக இருந்தாலும், அதன் பங்கு களை பைபேக் செய்ய செபி அனுமதி தராததற்கு முக்கியக் காரணம், இந்த நிறுவனத்தின் அதிகரிக்கும் கடன் தொகை. கடந்த 2009-ல் இந்த நிறுவனத்தின் கடன் தொகை ரூ.20,370 கோடியாக இருந்தது. இப்போது அது ரூ.1,07,524 கோடியாக அதிகரித்திருக்கிறது. அதாவது, கடன் மற்றும் பங்குகளுக்கான விகிதம் தற்போது 1.9 என்கிற அளவில் இருக்கிறது. இனிவரும் நாள்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்று செபி சந்தேகப்படுகிறது.