ஐபோன் முதல் உயர்ரக கார்கள் வரை... இனி எதையும் வாங்காமலே அனுபவிக்கலாம்! | Nanayam Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)

ஐபோன் முதல் உயர்ரக கார்கள் வரை... இனி எதையும் வாங்காமலே அனுபவிக்கலாம்!

நாணயம் புக் செல்ஃப்

‘‘ஒரு வெற்றிகரமான பிசினஸ் என்பது, ஒரு வெற்றிகரமான பொருளை உருவாக்கி, அதை அதிக எண்ணிக்கையில் விற்று, அதன்மூலம் நிலையான செலவுகளை மிகவும் குறைத்து, அதைக்கொண்டு தொடர்ந்து சந்தையில் போட்டி வராமல் பார்த்துக்கொண்டு, தொழிலைச் சிறப்புற நடத்துவதுதான். 

ஆனால், சமீப காலத்தில் இந்த பண்டையத் தொழில்முறை பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இனிவரும் காலத்தில் வெற்றிகரமான தொழில் என்பது குறிப்பிட்ட வாடிக்கை யாளர்களின் தேவையைக் கண்டறிந்து அதற்கு உண்டான சேவையை உருவாக்கித் தொடர்ந்து வாடிக்கையாளருக்கு அதனை வழங்கி வருதல் என்ற நவீன மாற்றத்தைச் சந்திக்கும். வாடிக்கையாளர் என்பவரைச் சந்தாதாரர் ஆக்கினால் தொடர்ந்து நிறுவனத்திற்கு வருமானம் வந்து கொண்டேயிருக்கும். இதைச் சந்தா சார்ந்த பொருளாதாரம் எனப் பெயரிட்டு அழைக்கலாம்’’ என்று சொல்லி, இந்தப் புத்தகத்தை ஆரம்பிக்கின்றனர் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்களான டியன் ஸூஓ மற்றும் கேப் வெய்சர்ட் என்கிற இருவரும். ஏன் சந்தா செலுத்தும் வகையிலான வியாபாரமே உங்களுடைய நிறுவனத்தின் எதிர்கால வியாபார உத்தியாக மாறும் என்பதைச் சொல்லும் ‘சப்ஸ்க்ரைப்ட்’ என்னும் புத்தகம், பிசினஸ் பற்றிய நமது கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவருவதாக இருக்கிறது.