மைண்ட்ட்ரீ... ஏன் வெளியேற நினைக்கிறார் சித்தார்த்தா? | Why Siddhartha wants to leave MindTree? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)

மைண்ட்ட்ரீ... ஏன் வெளியேற நினைக்கிறார் சித்தார்த்தா?

வாசு கார்த்தி

ந்தியாவில் முக்கியமான ஐ.டி சேவை நிறுவனங்களில் மைண்ட்ட்ரீயும் ஒன்று. விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிய நண்பர்கள் சிலர் இணைந்து 1999-ம் ஆண்டு உருவாக்கிய நிறுவனம்தான் மைண்ட்ட்ரீ. அசோக் சூட்டா தலைமையில், சுப்ரதோ பக்‌ஷியின் வழிகாட்டுதலில் இந்த நிறுவனம் உருவானது.

இந்த நிறுவனம் நன்கு வளர்ச்சி அடைந்து வந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு, சற்றும் எதிர்பாராத விதமாக நிறுவனத்தின் தலைவரான அசோக் சூட்டா இந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார். அந்தச் சிக்கலை  அப்போது வெற்றிகரமாகக் கையாண்ட இந்த நிறுவனத்தினால், தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக் கிறது.

மைண்ட்ட்ரீயின் தற்போதைய பிரச்னை இதுதான். 1999-ம் ஆண்டு முதலே  இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து, இத்தனை ஆண்டுகளாக நன்கு சம்பாதித்த வி.ஜி.சித்தார்த்தா தற்போது தன்னுடைய முதலீட்டை விற்றுவிட்டு, வெளியேற நினைக் கிறார். தனிப்பட்ட முறையிலும் தனக்குச் சொந்தமான நிறுவனமான காபிடே நிறுவனம் மூலமாகவும் மொத்தம் 21 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கிறார் சித்தார்த்தா.

தன்னுடைய பங்குகளை வாங்குவதற்கு ஏற்ற முதலீட்டாளரைத் தேடி வருகிறார்  சித்தார்த்தா. ஆனால், இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள், சித்தார்த்தா பங்குகளை விற்பனை செய்வதை விரும்பவில்லை. இதுவே மைண்ட்ட்ரீயில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு அடிப்படை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க