இறுக்கிப் பிடிக்கும் வருமான வரித் துறை... கிடுக்கிப் பிடியைத் தவிர்க்கும் வழிகள்! | Income tax department tightens belt: Ways to avoid - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)

இறுக்கிப் பிடிக்கும் வருமான வரித் துறை... கிடுக்கிப் பிடியைத் தவிர்க்கும் வழிகள்!

‘வருமானத்தைக் குறைத்துக் காண்பிப்பதும், வரிச் சலுகைகளை அதிகரித்துக்கொள்வதுமான தவறுகளைச் செய்து வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள்; நோட்டீஸ் அனுப்பும்படி செய்து கொள்ளாதீர்கள்!’ என்று சென்ற நிதியாண்டிலேயே முறையான முன்னெச்சரிக்கை ஒன்றை அறிவித்திருந்தது வருமான வரித் துறை. அப்படியிருந்தும், லட்சக்கணக்கானோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் வருமான வரித் துறைக்கு ஏற்பட்டுவிட்டது. சம்பளம் பெறுவோர் மட்டுமின்றி, சம்பளம் வழங்கும் அரசு அதிகாரிகளுக்கும் சேர்த்து,  லட்சக்்கணக்கில் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதிகாரியின் முடிவு...

சம்பளதாரர்களின் வருமான வரியைக் கணக்கிட, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை பற்றிய சுற்றறிக்கையை சம்பளம் பட்டுவாடா செய்யும் அதிகாரி களுக்கு அனுப்பி நடப்பாண்டில் தனது பிடியை இறுக்கியிருக்கிறது வருமான வரித் துறை. அதாவது, சம்பளம் வழங்கும் அதிகாரி, சம்பளதாரர் வரிச் சலுகை கோரும் இனங்களில், அதற்கான தகவல் மற்றும் விவரங்களைப் பெற்று, தனக்கு திருப்தி ஏற்பட்டால் வரிச் சலுகையை அனுமதிக்கலாம். தரப்பட்ட விவரம் / தகவல் திருப்திகரமாக இல்லையெனில், சம்பளதாரர் கோரும் வரிச் சலுகையை, சம்பளம் தரும் அதிகாரி அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க