ஸ்மால்கேப் ஃபண்ட்... மொத்த முதலீடு, எஸ்.ஐ.பி... எது லாபமாக இருக்கும்? | Interview with Edelweiss mutual fund manager Harshad Patwardhan - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)

ஸ்மால்கேப் ஃபண்ட்... மொத்த முதலீடு, எஸ்.ஐ.பி... எது லாபமாக இருக்கும்?

‘எடில்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட்’ ஹர்ஷத் பத்வர்தன் பேட்டி

டில்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின்  முதன்மை முதலீட்டு அதிகாரியும் நிதித் துறையில் சுமார் கால் நூற்றாண்டு அனுபவம் கொண்டவருமான ஹர்ஷத் பத்வர்தன் அண்மையில் சென்னைக்கு வந்திருந்தார்.  அவர் நமக்களித்த பேட்டி இனி...

இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கும் நிலையில் பங்குகளிலும், பங்குச் சந்தை  சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாமா?

‘‘பங்குச் சந்தை மற்றும் அது சார்ந்தவற்றில்  முதலீடு செய்ய நேரம் காலம் பார்க்கத் தேவை யில்லை. முதலீட்டாளர் ஒருவரின் முதலீட்டுக் கலவையில் பங்குச் சந்தை சார்ந்தது ஒருபகுதியாக இருக்கவேண்டும். இதன் அளவு அவரின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து, அஸெட் அலோகேஷன்படி அமைய வேண்டும். இது அனைவருக்கும் பொதுவானதல்ல. ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஒருவிதமாக இருக்கும்.’’

இந்தியப் பங்குச் சந்தை குறுகிய காலம், நடுத்தர காலம் மற்றும் நீண்ட காலத்தில் எப்படி இருக்கும்?

‘‘பொதுத் தேர்தல், பணவீக்க விகிதம், கச்சா எண்ணெய் விலை, சீனா - அமெரிக்கா வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் குறுகிய காலத்தில் இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களின்  வருமான வளர்ச்சி வரும் காலாண்டுகளில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நடுத்தரம் மற்றும் நீண்ட காலத்தில் இந்தியப் பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்பட அதிக வாய்ப்பிருக்கிறது.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க