பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sale in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நிஃப்டி இண்டெக்ஸ்

சந்தையில் ஏற்றத்தை நோக்கிய ஒரு ‘புல்லிஷ்’ போக்கு வந்துகொண்டிருப்பதாக நாம் குறிப்பிட்டிருந்த நிலையில், கடந்த வாரம் சந்தை அதற்குக் கட்டுப்பட்டது போன்றுதான் காணப்பட்டது. தொடர்ந்து உயர்மட்ட லெவல்களைச் சந்தை சீண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது, புல்லிஷ் போக்கு நடக்குமா என்பதைத் தாண்டி எப்போது நடக்கும் என்கிற நிலையே இருந்தது. முதல் இரண்டு நாள்களும்கூட, சந்தை நல்ல தொடக்கத்துடன் பெருமளவு சாதகமான நிலையிலேயே இருந்தது. சந்தையின் போக்கு எந்தப் பக்கம் இருக்கும் என்பது குறித்த நிச்சயமற்ற நிலை காணப் பட்டாலும், டிரேடர்கள் பிஸியாக இருக்கும் வகையில், போதுமான அளவுக்கு நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்து காணப்பட்டாலும், சந்தை எதிர்பார்த்த ‘பிரேக் அவுட்’ நல்லபடியாக வராது என்பதையும் சந்தை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

ஆனாலும், கடைசி இரண்டு வர்த்தக தினங் களில் சந்தை இலேசான இறக்கத்தைச் சந்தித்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட சரிவு, சற்றுக் கவலையளிக்கக்கூடியதாக இருந்ததோடு, மாருதி சுஸூகி மற்றும் ஜீ என்டர்டெயின்மென்ட் போன்ற சில பெரிய நிறுவனங்கள்கூட பாதிக்கப்பட்டன.