20 ஆண்டுகளில் ரூ.1 கோடி... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2019)

20 ஆண்டுகளில் ரூ.1 கோடி... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

கேள்வி - பதில்

என் வயது 30.  ரிலையன்ஸ் ஸ்மால்கேப், எல்&டி எமெர்ஜிங் பிசினஸ் ஃபண்ட், ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ஆகிய குரோத் ஃபண்டுகளில் தலா ரூ.2,000 வீதம் கடந்த ஜனவரி 2018 முதல் நான் முதலீடு செய்து வருகிறேன். எனது 50 வயதில் தோராயமாக ஒரு கோடி ரூபாய் கிடைக்க மேலும் எவ்வளவு தொகையை நான் முதலீடு செய்ய வேண்டும்?

செந்தில்குமார், கோயமுத்தூர்

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்

“நீங்கள், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளீர்கள். இவற்றில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வது நன்றாக இருக்கும். எனினும், இதன் பயணம் ஏற்ற இறக்கத்துடன்தான் இருக்கும் என்பதையும் மனதில்கொள்ள வேண்டும்.

20 ஆண்டுகளுக்குப்பின் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்க, ஆண்டுக்கு தோராயமாக 15% வருமானம் எனக்கொண்டால், மாதம் ரூ.7,000 முதலீடு செய்யவேண்டியிருக்கும். எனவே, தற்போது நீங்கள் முதலீடு செய்துவரும் 6,000 ரூபாயுடன், மேலும் 1,000 ரூபாயைக் கூடுதலாக முதலீடு செய்யவேண்டும்.”