முதலீடு வளர்வதற்கு கால அவகாசம் கொடுங்கள்! - ‘கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட்’ நிமேஷ் சந்தன் | Interview – Mr. Nimesh Chandan Fund Manager Canara Robeco - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2019)

முதலீடு வளர்வதற்கு கால அவகாசம் கொடுங்கள்! - ‘கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட்’ நிமேஷ் சந்தன்

நிதித் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைவருமான (ஈக்விட்டி) நிமேஷ் சந்தன் அண்மையில் சென்னை வந்திருந்தார். அவர் நாணயம் விகடனுக்கு அளித்த சிறப்புப் பேட்டி...

இந்தியப் பங்குச் சந்தை தற்போதைய நிலையில் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையைப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் எப்படிச் சமாளிப்பது?

“நீண்ட காலத்தில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், இந்த ஏற்ற இறக்கங்களைத் தாண்டி நல்ல லாபத்தை, குறிப்பாக, செல்வத்தை உருவாக்க முடியும்.”

இந்தியப் பங்குச் சந்தையின் செயல்பாடு, குறுகிய காலம், நடுத்தரக் காலம் மற்றும் நீண்ட காலத்தில் எப்படி இருக்கும்?

“குறுகியக் காலத்தைப் பொறுத்தவரை, இந்திய பங்குச் சந்தை இரண்டு முக்கிய நிகழ்வுகளைச் சார்ந்து இருக்கிறது. ஒன்று, மத்திய பட்ஜெட் சார்ந்த விஷயங்கள். இரண்டு, விரைவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலும் அதன் முடிவும். அந்த வகையில் அடுத்த சில மாதங்களுக்கு இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.  நடுத்தரம் முதல் நீண்ட காலத்தில் இந்த நிகழ்வுகளின் பாதிப்புக் குறைந்து, பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். கச்சா எண்ணெய் விலைக் குறைவால் நாட்டின் பணவீக்க விகிதம் குறைந்துவரும் சூழ்நிலை உருவாகும். இதனைத் தொடர்ந்து வட்டி குறைக்கப்படும் போது, வங்கிகள் கடன் வழங்குவது அதிகரித்து நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொருளாதாரம் மேம்படும். மேலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் இப்போதைக்கு அதிகரிக்கும் சூழ்நிலை இல்லை என்பதால், அது இந்தியப் பங்குச் சந்தைக்கு சாதகமாக இருக்கும்.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க