சுதந்திரத்துடன் கூடிய பொறுப்பு... உங்கள் நிறுவனத்தை வளர்க்கும் புதிய உத்தி! | Nanayam Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2019)

சுதந்திரத்துடன் கூடிய பொறுப்பு... உங்கள் நிறுவனத்தை வளர்க்கும் புதிய உத்தி!

நாணயம் புக் செல்ஃப்

ரு நிறுவனம் லாபம் சம்பாதிக்கத் திணறுகிறது என்றால், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒரு முக்கியமான காரணம், ஊழியர்கள் முழுச் சுதந்திரம் இல்லாமல், முழுப் பொறுப்பு உணர்வுடன் செயல்பட முடியாமல் இருப்பதாகும். ஊழியர்களுக்கு எப்படி முழுச் சுதந்திரத்தைத் தந்து, முழுப் பொறுப்பு உணர்வுடன் நடந்துகொள்வது என்பதைச் சொல்லும் புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் தலைமைப் பணியாளர் திறன் அதிகாரியாகப் (Chief Talent Officer) பணியாற்றிய மெக்கார்ட் என்கிற பெண்மணி இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். ‘பவர்ஃபுல்’ என்கிற இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் உண்மையிலேயே பவர்ஃபுல்லாக இருக்கிறது.