சமூக சேவைக்குக் கிடைத்த கெளரவம்! - விருது வழங்கிய ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் | Hindustan Chamber Confers Champion of Humanity Award - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2019)

சமூக சேவைக்குக் கிடைத்த கெளரவம்! - விருது வழங்கிய ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்

சென்னையில் உள்ள தொழில் அமைப்புகளில் பழைமை யானது ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ். 1945-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கடந்த 29-ம் தேதி தனது 73-வது சேம்பர் தின விழாவைக் கொண்டாடியது. அன்றைய தினம், சமூகத்துக்கு நற்பணியாற்றிய இரண்டு தொழிலதிபர்களுக்கு ‘சாம்பியன் ஆஃப் ஹியூமானிட்டி அவார்ட்’ என்ற விருதை தந்து கெளரவித்தது.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தினார் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் தலைவர் ராஜேந்திரகுமார். ‘‘இந்த அமைப்பு தொழில் துறையினருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பாலமாக இருந்து தொழில் துறையின் மேம்பாட்டுக்குப் பாடுபட்டு வருகிறது” என்றார்.