பாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை! | Disappearing Companies - Warning to Investors - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2019)

பாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை!

ம்மில் பலரும் சம்பாதித்த பணம் மொத்தத்தையும் தங்கத்திலும், ரியல் எஸ்டேட்டிலும் போடுவதற்கு முக்கியக் காரணம், அவை பாதுகாப்பானவை என்கிற எண்ணம் மனதில் திடமாக விழுந்துவிட்டது தான். பங்குச் சந்தையிலும் மியூச்சுவல் ஃபண்டிலும் பணத்தைப் போட்டால், எதிர்காலத்தில் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பயம்தான் அவர்களை வேறுமாதிரி யோசிக்கவிடாமல், வங்கி எஃப்.டி, வீடு, தங்கம் எனத் திரும்பத் திரும்ப தேடச் செய்கிறது.

முதலீடு குறித்த நமது தவறான எண்ணங்களைத் தவிடுபொடியாக்கி, சரியான முதலீடு எது என்பதை எடுத்துச் சொல்வதாக இருந்தது சென்னையில் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்று. மினிஸ்ட்ரி ஆஃப் கார்ப்பரேட் அபயர்ஸ் சென்னை ஐ.சி.ஏ.ஐ பவனில் ‘Save to be Safe’ என்கிற தலைப்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல நிதி நிபுணர்கள் பேசினார்கள். அவர்கள் பேசியதாவது...