ஜீ குழுமப் பங்குகள் சரிவு... என்னதான் காரணம்? | Zee group stocks falls: What's the reason? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2019)

ஜீ குழுமப் பங்குகள் சரிவு... என்னதான் காரணம்?

வாசு கார்த்தி

ணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்தாலும் அதன் பின்விளைவுகள் இன்னும் தொடரவே  செய்கின்றன. இதன் சமீபத்திய பலி, ஜீ குழுமம். சில நாள்களுக்குமுன் ஜீ மற்றும் டிஷ் டிவி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. ஒரே நாளில் ஜீ பங்கு 26 சதவிகிதமும், டிஷ் டிவி 33 சதவிகிதமும் சரிந்தன. ஒரே நாளில் சுமார் ரூ.13,686 கோடி அளவுக்கு அந்தக் குழுமத்தின் சந்தை மதிப்பு சரிந்தது.

ஜீ குழுமத்தின் இந்த இரண்டு பங்குகளின் விலை மட்டும் திடீரென சரியக் காரணம்,  ஆச்சர்யம் தரும் தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியானது தெரியும்.

இரண்டு ஆண்டுகளுக்குமுன், பணமதிப்பு நீக்கத்தின்போது ரூ.3,000 கோடி அளவிலான தொகை போலி நிறுவனங்கள் மூலம் மாற்றப் பட்டிருக்கிறது. இதில் எஸ்ஸெல் (Essel Group) குழுமத்துக்கும் தொடர்பு இருக்கிறது என வெள்ளிக்கிழமை அன்று செய்திகள் வெளி யானது. இதனால் எஸ்ஸெல் குழுமத்தைச் சேர்ந்த ஜீ மற்றும் டிஷ் டிவி ஆகிய இரு பங்குகளும் கடுமையாகச் சரிந்தன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க