ஷேர்லக்: பொதுத் துறை நிறுவனப் பங்குகள் பைபேக்... உஷார்! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2019)

ஷேர்லக்: பொதுத் துறை நிறுவனப் பங்குகள் பைபேக்... உஷார்!

ஓவியம்: அரஸ்

ட்ஜெட் எப்படி... சுமாரா, சூப்பரா என யாரிடமோ போனில் கேட்டுக்கொண்டே நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். அவர் பேசி முடித்ததும், அவர் போனில் யாரிடமோ கேட்ட கேள்வியைக் நாம் கேட்டோம். “சப்ஜெக்ட்டுக்கு போலாமா பாஸ்...” என நம்மைத் திசை திருப்பினார். நாம் கேள்விகளைக் கேட்கத் தயாரானோம்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சாரை பணிநீக்கம் செய்துள்ளதே அந்த வங்கி?

“ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் மேலாண்மை இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சாந்தா கோச்சாருக்கு எதிரான முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில், விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், சாந்தா கோச்சார் ஆண்டு அறிக்கைகளை முறையாகச் சமர்ப்பிக் காமல் கடமையிலிருந்து தவறியுள்ளதாகவும், வங்கி நடத்தை விதிகளை மீறி அவர் செயல்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.’’ 

நீங்க எப்படி பீல் பண்றீங்க