வளர்ச்சிக்கு வழிவகுக்குமா வட்டிக் குறைப்பு? | Editorial page - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

வளர்ச்சிக்கு வழிவகுக்குமா வட்டிக் குறைப்பு?

ஹலோ வாசகர்களே..!

ங்கிகளுக்கு ஆர்.பி.ஐ வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்திருப்பதன்மூலம் மத்திய அரசாங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறார் மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஷக்திகந்த தாஸ். கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பிறகு மத்திய ரிசர்வ் வங்கி இப்போதுதான் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், உர்ஜித் பட்டேல் செய்ய மறுத்த ஒரு விஷயத்தை ஷக்திகந்த தாஸ் துணிச்சலாகச் செய்ததற்குப் பல காரணங்கள் உண்டு.