ஆம்ஃபி அதிரடித் திட்டம்: ஒரு நாள் சம்பளம்... ஒரு கோடி பேர் முதலீடு! | Interview with AMFI chief executive NS Venkatesh - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

ஆம்ஃபி அதிரடித் திட்டம்: ஒரு நாள் சம்பளம்... ஒரு கோடி பேர் முதலீடு!

என்.எஸ் வெங்கடேஷ், தலைமை செயல் அதிகாரி, ஆம்ஃபி

ந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி-யின் (AMFI) தலைமை செயல் அதிகாரி என்.எஸ்.வெங்கடேஷ் அண்மையில் சென்னை வந்திருந்தார். அவரைச் சந்தித்துப் பேசினோம். செபியின் செயல்பாடுகள், முதலீட்டாளர்கள் நலன் உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார் அவர்.

“ஆம்ஃபி மூலம் இந்தியாவில் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இது ஒரு சிறந்த முதலீடு. குறைந்த செலவில் நீண்ட காலத்தில் இதன்மூலம் செல்வத்தை உருவாக்க முடியும் என்பதை எடுத்துச்சொல்லி வருகிறோம்.

செபி மூலம் மியூச்சுவல் ஃபண்ட் துறை மிகவும்  ஒழுங்குமுறைபடுத்தப்பட்டுள்ளது.  கிராமங்களைச் சேர்ந்தவர்கள், குறுகிய காலத்தில் முதலீடு இரு மடங்கு, மூன்று மடங்காகும் என்று ஏமாற்றுத் திட்டங்களில் பணத்தைப் போட்டு, ஏமார்ந்து போகிறார்கள். இதுபோன்றவர்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, அவர்களை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வைத்து வருகிறோம்.

ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரை,  ஒரு கோடி பேரின் ஒரு நாள் சம்பளத்தை மியூச்சுவல் ஃபண்டில்  முதலீடு செய்ய வைப்பதை எங்கள் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இதுவரைக்கும் சுமார் 20 லட்சம் பேரை அப்படிச் செய்ய வைத்திருக்கிறோம். இன்னும் ஆறு மாதங் களில் 80 லட்சம் பேரை முதலீடு செய்ய வைக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க