கேள்வி - பதில்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, தேசிய ஓய்வூதியத் திட்டம், எது சிறந்ததாக இருக்கும்?
தங்கத்தம்பி, எடப்பாடி
எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்
``இந்த வித்தியாசத்தை விளக்க நான் எளிய உதாரணம் தருகிறேன். மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதாமாதம் 15,000 ரூபாயை 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், மொத்த முதலீடு 15,000*12*15 ஆண்டுகள் = ரூ.27 லட்சம் ஆகும். இந்தத் தொகைக்கு 15% வருமானம் கிடைக்கும் எனக்கொண்டால் ரூ.1 கோடி கிடைக்கும்.
முதலீட்டுத்தொகை ரூ.27 லட்சம், வரிக்கழிவுத் தொகை 1 லட்சம் போக ரூ.72 லட்சத்துக்கு தற்போதைய வரிமுறைப்படி 10% எனக் கணக்கிட்டால், ரூ.7.2 லட்சம் வருகிறது. இதைக் கழித்ததுபோக நமக்கு ரூ.92.8 லட்சம் கிடைக்கும். தொடர்ச்சியாக வருமானத்தை வேறு ஃபண்டுகளுக்கு மாற்றம் செய்வதன்மூலம் நீண்டகால ஆதாய வரியைக் குறைக்கலாம்.