கடன் தீர்ப்பாயத்தில் விண்ணப்பம்... ஆர்.காமின் முடிவு நெருங்குகிறதா? | RCom Proposed Debt Resolution Plan to NCLT - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

கடன் தீர்ப்பாயத்தில் விண்ணப்பம்... ஆர்.காமின் முடிவு நெருங்குகிறதா?

வாசு கார்த்தி

னில் அம்பானிக்குச் சொந்தமான ஆர்.காம் தன்னுடைய இறுதி நாள்களை நெருங்கிக்கொண்டிருக் கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தேசிய சட்ட நிறுவனத் தீர்ப்பாயத்திடம் (NCLT) திவால் சட்டத்தின்கீழ் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ஆர்.காம் விண்ணப்பித்தி ருக்கிறது. இதன் காரணமாக அனில் அம்பானி குழுமத்தின் அனைத்துப் பங்கு களும் கடுமையான சரிவைச் சந்தித்திருக்கின்றன.

‘‘கடந்த 18 மாதங்களுக்குமேலாக நிறுவனத்தின் கடனை அடைப்பதற்குப் பல வகைகளிலும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால், இந்த நடவடிக்கைகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்பதால், நாங்களாகவே என்.சி.எல்.டி-யிடம் விண்ணப்பித்திருக்கிறோம். இதன் மூலம் 270 நாள்களுக்குள் தீர்வு காணப்படும். இது அனைத்துத் தரப்பினருக்கும் நல்லது’’ என ஆர்.காம் நிறுவனத்தின் இயக்குநர் குழு தெரிவித்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க