சிறு வியாபாரிகளுக்கு உதவும் ஜெம்... மதுரையிலிருந்து கலக்கும் அருள்மொழி! | PM Modi meets Mudra entrepreneur Arulmozhi Saravanan - nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

சிறு வியாபாரிகளுக்கு உதவும் ஜெம்... மதுரையிலிருந்து கலக்கும் அருள்மொழி!

பிரதமர் மோடி சமீபத்தில் மதுரை வந்தபோது அருள்மொழி சரவணனை சந்தித்ததைத்தான் எல்லோரும் வியந்து பேசினார்கள். பெருந்தொழிலதிபர்கள் மதுரையில் இருக்கும்போது, அருள்மொழியைப் பிரதமர் சந்தித்தது ஏன்?

மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘ஜெம்’ இ-மார்க்கெட்டிங் தளத்தில் (GEM -Government E-Market  Place) வெற்றிகரமாகத் தொழில் செய்துவரும் அருள்மொழியை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கினார் பிரதமர்.

நாடு முழுவதுமுள்ள மத்திய, மாநில அரசு அலுவல கங்களுக்குத் தேவையான பொருள்களை எந்தவித இடைத்தரகரும் இல்லாமல், கமிஷன் இல்லாமல், ஆன்லைன் மூலமாக ஆர்டர் பெற்று, இருபது நாள்களுக்குள் பணம் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தத் தளத்தை  மத்திய அரசாங்கம்  உருவாக்கியது. 2014-ம் ஆண்டு இந்தத் தளம் ஆரம்பிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் 5,000 விற்பனையாளர்களே இதில் பதிவு செய்திருந்தார்கள். இப்போது 1.5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 

தமிழகத்திலிருந்து இந்த இ-மார்க்கெட்டிங் கில் முதலில் நுழைந்தவர்தான் அருள்மொழி.  ‘ஜெம்’-ஐ இவர் எப்படித் தெரிந்துகொண்டார், அதன்மூலம் நாடு முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களுக்குப் பொருள்களை எப்படி சப்ளை செய்கிறார் என்பது ஆச்சர்யமான விஷயமே.

நீங்க எப்படி பீல் பண்றீங்க