பட்ஜெட் வருமான வரிச் சலுகை... யாருக்கு எவ்வளவு சேமிப்பு? | Budget 2019: Income Tax slab beneficiaries - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

பட்ஜெட் வருமான வரிச் சலுகை... யாருக்கு எவ்வளவு சேமிப்பு?

டந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ள தனிநபர்களுக்கு முழுமையாக வரி தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்கள் எந்த வரியும் கட்டத் தேவையில்லை. பி.எஃப், லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம் போன்றவை  மூலம்  ரூ. 6.5 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்கள் வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை என அறிவித்தார்.

இந்த வரிச் சலுகை, வருமான வரிப் பிரிவு 87ஏ-யின்கீழ் வழங்கப்படுகிறது. தற்போது  இந்தப் பிரிவின்கீழ் ரூ.3.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.2,500 வரை வரித் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. வரும் 2019-20-ல் ரூ.5 லட்சம் வரை வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு அதிகபட்சம் ரூ.12,500 வரை வரித் தள்ளுபடி வழங்கப்படும்.

அடிப்படை வருமான வரி வரம்பு (ரூ.2.5 லட்சம்) மற்றும் வரி விகிதம் (5%, 20%, 30%)  மாற்றப்படவில்லை என்பதால், வரி செலுத்தும் அனைவருக்கும் இந்த வரிச் சலுகை கிடைக்கவில்லை. அதாவது,  வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டுபவர்களுக்கு இந்தச் சலுகை கிடையாது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க