பங்கு அடமானம்... முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை மணி! | Share mortgage: An alert to investors - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

பங்கு அடமானம்... முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை மணி!

டந்த சில வாரங்களில் ஜீடெலி, ஆர்.காம் போன்ற நிறுவனப் பங்குகளின் விலை தாறுமாறாக இறங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம், இந்த நிறுவனங்களின் புரமோட்டர்கள் தங்கள் வசமுள்ள பங்குகளைப் பெருமளவில் அடமானம் வைத்து, அந்தப் பங்குகளைத் திரும்பப் பெறமுடியாமல் போனதால்தான்.

பங்கு அடமானம் என்பது எல்லா நிறுவனங்களும் செய்வதுதான் என்றாலும், அதிக அளவில் அடமானம் வைக்கப்பட்ட பங்குகளை புரமோட்டர்களே மீண்டும் திரும்ப எடுக்க முடியாத நிலை ஏற்படுவது ஆரோக்கியமான போக்கல்ல. புரமோட்டர்கள் பங்குகளை அடமானம் வைக்கவேண்டியதற்கான தேவைகள் என்ன, இதனால் சிறு முதலீட்டாளர் களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன என்பது குறித்துப் பார்ப்போம். 

   பங்கு அடமானம்

சிறு முதலீட்டாளரோ அல்லது புரமோட்டரோ, யாராக இருந்தாலும் தங்களது பங்குகளைப் பிணையாகக்கொண்டு, தனிப்பட்ட செலவினம், முதலீடுகள் அல்லது வேறெந்தக் காரணத்திற் காகவும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங் களிடமிருந்து நேரடியாகக் கடன் பெற முடியும்.   

பொதுவாக, வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், பட்டியிடலிடப்பட நிறுவனங் களின் பங்குகளை அடமானம் பெற்றுக்கொண்டு கடன் வழங்குகின்றன. சாதாரண நேரங்களில் பங்கு அடமானக்கடன் பாதுகாப்பானதாகவும், வசூல் எளிமையானதாகவும் இருப்பதினால், இந்த வகைக் கடன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

புரமோட்டர்கள், பங்குகளை அடமானம் வைத்துக் கடன் பெற்ற தகவலை முறையாக எக்ஸ்சேஞ்சுகளுக்கு அறிவிக்க வேண்டும் என்ற செபி நெறிமுறையின் அடிப்படையிலும், நிறுவனத்தின் சந்தை மதிப்பு பற்றிய எதிர்பார்ப்பு களின் பேரிலுமே பெரும்பாலான கடன்கள் வழங்கப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள 2,950 நிறுவனங்களின் 2,14,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் (06.02.2019) அடமானம் வைக்கப்பட்டிருப்பதாக பி.எஸ்.இ சொல்கிறது.

தமக்குச் சொந்தமான பங்குகளை சந்தையில் விற்றும்கூட ஒரு முதலீட்டாளரால் தேவையான பணத்தைத் திரட்டிக்கொள்ள முடியும் எனும் பட்சத்தில் பங்குகளை அடமானம் வைத்துக் கடன் பெறுவதற்குப் பணத்தேவை தவிர, இதர காரணங்களும் இருக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க