ஷேர்லக்: இலக்கு விலை உயர்த்தப்பட்ட பங்குகள்..! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

ஷேர்லக்: இலக்கு விலை உயர்த்தப்பட்ட பங்குகள்..!

ஓவியம்: அரஸ்

மாலை சரியாக நான்கு மணிக்கு நம் அலுவலகத்துக்குள் நுழைந்தார் ஷேர்லக். அவரை அப்படியே நம் அலுவலக கேன்டினுக்கு அழைத்துச் சென்று ஆப்பிள் ஜூஸ் வாங்கித் தந்தோம். “வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டதால் இனி ஜில்லுன்னு ஜூஸ்தான் சரியாக இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே பருகத் தொடங்க, நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

சுஸ்லான் எனர்ஜி ஒரே நாளில் பங்கு விலை 43% வீழ்ச்சி கண்டுள்ளதே!

“வாராக் கடன் பிரச்னையில் சிக்கியதாக யூகங்கள் கிளம்பியதால், சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் ஒரே நாளில் பங்கு விலை 43% வரை வீழ்ச்சியடைந்து உள்ளது. பின்னர், அந்த யூகங்கள் வெறும் வதந்தியென பங்குதாரர் களுக்குப் புரியவைத்ததால், நிறுவனப் பங்குகளின் விலைச்சரிவு ஓரளவு சரியாகி வீழ்ச்சி 23.6% என்ற அளவில் வந்து நின்றது. அன்றைய தினம், பங்கு விலை ரூ.2.7 என்ற மிகக் குறைந்த அளவிற்குச் சென்று, பின்னர் ரூ.3.63 என்ற அளவில் நிறைவடைந்தது. இந்த நிறுவனத்தின் 10.2 லட்சம் பங்குகள் சில்லறை முதலீட்டாளர்களின் வசம் உள்ளன. இந்த நிறுவனம், கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.280 கோடி நிகர இழப்பையும், ஜூன் காலாண்டில் ரூ.575 கோடி நிகர இழப்பை யும் சந்தித்திருந்தது. கடந்த மார்ச் 2018-ல் இந்த நிறுவனத்தின் நிகரக் கடன் தொகை ரூ.6,803 கோடியாகவும், செயல்பாட்டு மூலதனக் கடன் ரூ.3,395 கோடியாகவும் உள்ளது.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க