காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 24 - வங்கிகளைப் பாதித்த விஷயங்கள்.... நிதிச் சந்தை சந்திக்கும் சவால்கள்! | Coffee Can Investing - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 24 - வங்கிகளைப் பாதித்த விஷயங்கள்.... நிதிச் சந்தை சந்திக்கும் சவால்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ரே விஷயத்தை ஒரே மாதிரியாய் திரும்பத் திரும்ப செய்துவிட்டு, வேறுவிதமான பலாபலன்களை எதிர்பார்ப்பதன் பெயர்தான் பைத்தியக்காரத்தனம். - அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 
வங்கிகளைப் பாதித்த விஷயங்கள் பலவும் ஒரு வைரஸைப்போல,  நிதி மற்றும் பாண்ட் சந்தைகளுக்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. எங்களுடைய ஒட்டுமொத்த தொகுப்பான அறுபது ஆண்டுகால அனுபவத்தில் நாங்கள் கண்டறிந்தது என்னவென்றால், இந்தியாவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களில் 80% அளவு உண்மையை வெளிப்படுத்தும் பலனைத் தருபவயாக இல்லை. இதனாலேயே முதலீட்டாளர்கள் தங்களுடைய தீர்க்கமான தடயவியல் அறிவுடன்கூடிய நிறுவனம் வெளியிடும் கணக்குவழக்குகளைப் புரிந்து கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நிறுவனத்துக்கான இயக்குநர்களை பங்குதாரர் களிடமிருந்து (பங்கு முதலீட்டாளர்கள்) பெரிதாகவோ,  சிறிதாகவோ எந்தவித யோசனையையும் கேட்காமலேயே நிறுவனங்களின் நிர்வாகிகள் பெரும்பாலான சமயம் நியமிக்கிறார்கள். இது நிர்வாகிகளையும், பல முக்கிய முடிவுகளை எடுக்கும் பலம் பொருந்திய உள்ளாட்களையும் (இன்சைடர்ஸ்) அதிக பலம்கொண்டவர்களாக மாற்றி விடுகிறது. இதனால் இவர்கள் பங்குதாரர்களை மதிக்காத நிலை ஏற்பட்டுவிடுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close