கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி | Commodity trading Agri products - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில், தொடர்ந்து இறங்கு முகமாவே இருந்துவந்தது. 24.12.2018 வரை தொடர்ந்து 1427 என்ற புள்ளியில் ஆதரவை எடுத்து மேலே ஏற ஆரம்பித்தது. இந்த ஆதரவு எல்லை என்பது மிக வலுவான ஆதரவாகவும் பார்க்கலாம். மென்தா ஆயில், 1410 என்ற ஆதரவை எடுத்த பிறகு, ஏற்றத்திற்கு முனைந்தது. இது ஒரு நல்ல ஏற்றமாக இருந்தாலும்கூட 07.01.2019 அன்று உச்சமாக 1636 என்ற புள்ளியைத் தொட்டு பின் கீழே இறங்க ஆரம்பித்தது. 

இந்த இறக்கம் 23.01.2019 அன்று 1466 என்ற புள்ளியைத் தொட்டு மேலே திரும்ப ஆரம்பித்தது. அதாவது, முந்தைய குறைந்தபட்ச புள்ளியான 1427-ஐ விட உயர்ந்து திரும்பியுள்ளது. இதை ஹயர் பாட்டம் என்று சொல்லுவோம். இந்த ஏற்றம் தொடர்ந்து பிப்ரவரி மாதம் முழுவதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.  இந்த ஏற்றம் வலிமையாக இருந்தாலும், முந்தைய உச்சமான 1636 என்ற எல்லைக்கு அருகில் வந்தபிறகு தடுமாறிக்கொண்டு இருக்கிறது.

சென்ற வாரம், மென்தா ஆயில் வலிமை யாக ஏறினாலும், வலிமையான ஒரு காளை களுக்கான கேன்டில் தோன்றினாலும், அடுத்து ஒரு ஷூட்டிங் ஸ்டார் தோன்றி உள்ளது. அதாவது, முந்தைய உச்சமான 1636 என்ற எல்லையையும் தாண்டி 1662 என்ற உச்சத்தைத் தொட்டு பின் முடியும்போது 1619 என்ற புள்ளியில் முடிந்துள்ளது.  எனவே, காளைகளின் முயற்சி இதில் தோல்வி அடைந்துள்ளதையே இது காட்டுகிறது.  அடுத்தநாள், காளைகள் மென்தா ஆயிலின் விலையை ஏற்ற முயற்சி செய்து 1638 வரை கொண்டு சென்றனர். ஆனால், அங்கு கரடிகளால் தடுக்கப்பட்டு இறங்கி 1615 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. அதாவது, ஒரு ஸ்பின்னிங் டாப் உருவாகி உள்ளது.

இனி என்ன செய்யலாம்? தற்போது 1648 என்பது வலிமையான தடைநிலையாகவும், கீழே 1590 என்பது உடனடி ஆதரவாகவும் உள்ளது.

[X] Close

[X] Close