முதல்முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஃபண்டுகள்! | Interview with Chockalingam Narayanan of BNP Paribas Mutual Fund - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

முதல்முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஃபண்டுகள்!

‘பி.என்.பி பரிபா மியூச்சுவல் ஃபண்ட்’ சொக்கலிங்கம் நாராயணன் சிறப்புப் பேட்டி

முதலீட்டு ஆராய்ச்சியில் ஒரு டஜன் ஆண்டுகளுக்குமேல் அனுபவம் கொண்டவரும், பி.என்.பி பரிபா அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் (BNPParibas Asset Management)ஆராய்ச்சி பிரிவு தலைவருமான சொக்கலிங்கம் நாராயணன் அண்மையில் சென்னைக்கு வந்திருந்தார். அவர் நாணயம் விகடன் இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி...

இந்தியப் பங்குச் சந்தை தற்போது அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. இந்த நிலை எவ்வளவு காலத்திற்குத் தொடரும்?

“பங்குச் சந்தை முதலீடு என்றாலே ஏற்ற இறக்கம்தான். குறியீடுகள், பங்குகள் விலை மேலே ஏறுவது கீழே இறங்குவது ஒன்றும் புதிதல்ல. பங்குச் சந்தையில் எந்த அளவுக்கு ஏற்ற இறக்கம் இருக்கிறதோ,  ரிஸ்க் இருக்கிறதோ அந்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். கடன் சந்தையைப் பொறுத்தவரையில் முதலில் டெபாசிட் போட்ட முதலீட்டாளர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டுத்தான் பிறகு மற்றவர் களுக்குக் கொடுப்பார்கள். பங்குச் சந்தையில் அப்படி அல்ல. ஒரு நிறுவனம் லாபத்தில் அதற்குத் தேவையான தொகையை எடுத்துக்கொண்டு இறுதியாக இருக்கும் நிகர லாபத்தின் ஒரு பகுதியைத்தான் முதலீட்டாளர்களுக்கு வழங்கு வார்கள். அந்த வகையில் கடன் பத்திரங்களை விட, பங்கு முதலீடு கொஞ்சம் அதிக இடர்பாட்டைக் கொண்டதாக இருக்கிறது. அதே நேரத்தில், நீண்ட காலத்தில் கடன் பத்திரங்களை விட பங்குச் சந்தை முதலீடு நல்ல லாபத்தை அளித்து வருகிறது.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close