புரமோட்டர்களின் நிறுவனங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகள்! | Mutual fund investments in Promoters companies - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

புரமோட்டர்களின் நிறுவனங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகள்!

ஆர்.மோகனப் பிரபு, சார்ட்டர்ட் ஃபைனான்ஷியல் அனலிஸ்ட்

‘இந்தியாவின் லேமென் பிரதர்ஸ் தருணம்’ எனக் கருதப்படும் ஐ.எல்.எஃப்.எஸ் நிதி நெருக்கடி பிரச்னை பெரிதாக வெடித்ததற்குப் பின்னர், புரமோட்டர்களின் நிர்வாக நடைமுறைகள் குறித்து வெளிவரும் பல்வேறு தகவல்கள் முதலீட்டாளர்களுக்குக் கவலை தருபவையாக உள்ளன.  மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீட்டு நடைமுறைகள் குறித்து வெளிவரும் சில தகவல்களும் விரும்பத்தக்கவையாக இல்லை.

குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்டுகள் தமது புரமோட்டர் சார்ந்த நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்வது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. அதிலும், சமீபத்தில் பங்குச் சந்தையில் பெரும் சரிவைக் கண்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்களான  திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ், இண்டியாபுல்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் ஆகியவற்றின் கடன் பத்திரங்களில், குறிப்பிட்ட குழும சார்பு மியூச்சுவல் ஃபண்டுகள் பெருமளவு முதலீடு செய்திருப்பது பற்றி இங்கு விவாதிப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close