சொந்த வீடு... அப்பா கொடுத்த பணத்துக்கு வரி உண்டா? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

சொந்த வீடு... அப்பா கொடுத்த பணத்துக்கு வரி உண்டா?

கேள்வி - பதில்

நான் சொந்தமாக வீடு வாங்குவதற்கு என் அப்பா எனக்கு ரூ.5 லட்சம் கொடுத்து உதவினால், அந்தத் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டுமா?

- முத்துராஜ், திண்டுக்கல்

எஸ்.பாலாஜி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

‘‘உங்கள் அப்பாவிடமிருந்து ரூ.5 லட்சத்தை பரிசாகவோ அல்லது கடனுதவியாகவோ  வாங்கியிருந்தாலும் அதற்கு வரி கட்டத் தேவையில்லை. ஆனால், அந்தப் பணம் வங்கிக் கணக்கின்மூலமாகவே பரிமாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், உங்களுடைய தந்தைக்கு அந்த ரூ.5 லட்சம்  வருமானம் வந்ததற்கான வழிமுறைக் கணக்கில் காட்டப்பட்டதாக இருக்க வேண்டும். அப்படிக் கணக்கில் காட்டப் படாததாக இருந்தால், அந்தத் தொகைக்கு வரி செலுத்தியாக வேண்டும்.’’

[X] Close

[X] Close