கடன் தொல்லை... விடுபடுவது எப்படி? - ஸ்னோபால் வழிமுறைகள் | Debt Snowball method to Pay Off Debt - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

கடன் தொல்லை... விடுபடுவது எப்படி? - ஸ்னோபால் வழிமுறைகள்

டன் வாங்குவதற்கு அவமானப்பட்ட காலம் போய், எதற்கெடுத்தாலும் கடன் வாங்குகிற நவீன உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். பர்சனல் லோன் வேண்டுமா, ஹோம் லோன் வேண்டுமா, கார் லோன் வேண்டுமா என வங்கிகளிலிருந்தும், நிதி நிறுவனங்களிலிருந்தும் அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இ.எம்.ஐ ஆஃபர் மூலம் நிறுவனங்களும் நம்மை கடன் வாங்கத் தூண்டுகின்றன. இந்தக் கடன்கள் மூலம் கிடைக்கும் வசதிகள் குறுகிய காலத்தில் நம்மை மகிழ்ச்சியில் கொண்டாட வைப்பது என்னவோ உண்மைதான். ஆனால், நீண்ட காலத்தில் நம்முடைய நிதி மற்றும் முதலீட்டு வாழ்க்கையைச் சிக்கலாக்கி விடுகிறது என்பதைப் பிறகுதான் உணர்கிறோம்.

குழந்தைகளின் படிப்புக்கு, திருமணத்துக்கு, உங்கள் ஓய்வுக்காலத்துக்கு என வாழ்க்கையின் எந்தவொரு முக்கியமான இலக்குகளுக்கும் முதலீடுகளைத் தொடங்க முடியாமல் கடன் சுமையில் தவிப்பவர்கள் ஏராளம். இப்படிச் சிக்கலில் சிக்கித் தவிக்கும்போதுதான் இந்தச் சிக்கலிலிருந்து விடுபட என்ன வழி என நாம் தேடுகிறோம். 

மாதந்தோறும் செலுத்தும், கடன் தவணைகள் (EMI) இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நாம் அனைவரும் ஏதோ ஒருவிதமான கடனுக்கு கடமைப்பட்டவர்களாகவே இருக்கிறோம். கார் கடன், தனிநபர் கடன், நகைக் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற ஏதாவது ஒரு கடன் தவணையைக் கட்டி கொண்டுதான் இருக்கிறோம். பலர் ஒரே நேரத்தில் பல கடன் தவணைகளை கட்டிக் கொண்டிருப்பார்கள். கடன் தவணைகள் இல்லாத வாழ்க்கை சாத்தியமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close