‘சாஸ்’ நிறுவனங்களின் தலைநகரமாகும் சென்னை! | Chennai is SaaS capital of India - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

‘சாஸ்’ நிறுவனங்களின் தலைநகரமாகும் சென்னை!

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் இந்தியாவின் டெட்ராய்டு... இவை இரண்டுமே இருப்பது நம் தமிழகத்தில்தான். இரண்டுமே தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குச் சான்று. இந்தப் பட்டியலில் புதிதாக ‘சாஸ்’ (SaaS - Software as a service) தலைநகரம் சென்னை என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். அந்தளவுக்கு மென்பொருள் சந்தையில் இந்திய அளவில் கோலோச்சுகின்றன சென்னையைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனங்கள்.

ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ, கிரிஷ் மாத்ருபூதத்தின் ஃபிரெஷ் வொர்க்ஸ், சுரேஷ் சம்பந்தத்தின் கிஸ்ஃப்ளோ ஆகிய மூன்றும், இந்த மென்பொருள் போட்டியில் முன்னிலை வகிக்கின்றன. சென்னையின் சாஸ் கட்டமைப்பில் இந்த மூன்று நிறுவனங்களும் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். இந்த வெற்றிப்பாதையில் அடுத்துவரும் நிறுவனங் களும் பயணிக்கவேண்டும் என்பதற்காகவும், சென்னையின் இடத்தை சாஸ் துறையில் தக்கவைப்பதற்காகவும் ‘சாஸ் பூமி’ என்ற நிகழ்வை அண்மையில் நடத்தி முடித்திருக்கின்றன இங்கிருக்கும் நிறுவனங்கள். இதில் சென்னையைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட சாஸ் நிறுவனங்களின் தலைவர்கள்  பங்கேற்றுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close