கவனத்துடன் கற்கும் சூட்சுமம்! | Nanayam Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

கவனத்துடன் கற்கும் சூட்சுமம்!

நாணயம் புக் செல்ஃப்

முழு கவனத்துடன் நாம் எந்தவொரு விஷயத்தையும் கற்றுக்கொள் கிறோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். கவனத்துடன் கற்றுக்கொள்வதின் மகத்துவத்தைத்தான் சொல்லித் தருகிறது எல்லென் ஜே லாங்கர் எனும் பெண்மணி எழுதிய ‘தி பவர் ஆஃப் மைண்ட்ஃபுல் லேர்னிங்’ எனும் புத்தகம்.

“கற்றலில் கவனமின்மைக்குக் காரணம் நம்முடைய பள்ளிகளேயாகும். நம்முடைய ஆசிரியர்கள்தான் கவனச்சிதறலை நமக்குக் கற்றுக்கொடுத்து விடுகின்றனர் எனலாம்” என்கிறார் புத்தகத்தின் ஆசிரியை.
“பள்ளிகள் இதை இரண்டு வழிகளில் வெற்றிகரமாகச் செய்கின்றன. ஒன்று பள்ளிகள் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்ய கற்றுக் கொடுக்கின்றன. இரண்டாவது எந்தவொரு விஷயத்தையும் உள்ளது உள்ளபடி ஒப்புக் கொள்ள நம்மைத் தயார்படுத்துபவையாக இருக்கின்றன.

 ‘எந்தவொரு விஷயமும் நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை. அதை நாம் எப்படி நினைக்கிறோமோ, அதிலிருந்தே அது நல்லதாகவும் கெட்டதாகவும் மாறுகிறது’ என்றார் சேக்‌ஸ்பியர்.

நான் இந்தக் கருத்துடன் மற்றொரு விஷயத்தை சேர்த்துச் சொல்வேன். ஒருவரின் செயல்பாடு என்பது அவருடைய பார்வை யிலிருந்தே சரியா தவறா என்று கணிக்கப்பட வேண்டும். ஏன் ஒருவர் ஒரு செயலைச் செய்கிறார் என்றால் அவருடைய பார்வையில் அது சரியாகத் தெரிந்த காரணத்தாலேயே என்பேன்.

[X] Close

[X] Close