பலமுனைத் தாக்குதலில் அனில் அம்பானி... தொடரும் சிக்கல்கள்! | Anil Ambani: The tough life of an Ambani - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

பலமுனைத் தாக்குதலில் அனில் அம்பானி... தொடரும் சிக்கல்கள்!

வாசு கார்த்தி

டந்த சில ஆண்டுகளாகவே அனில் அம்பானி சிக்கலில்தான் இருக்கிறார். இருந்தாலும், கடந்த சில வாரங்களாக பலமுனைகளிலிருந்தும் வரும் பிரச்னைகளால் அனில் தாக்கப்படுகிறார். தற்போது அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக ரபேல் ஒப்பந்தம் மாறியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் பெயர் அடிப்படுகிறது. இது அரசியல் ரீதியான பிரச்னை என்றாலும், அனில் அம்பானியின் பெயர் தேவையில்லாமல் அடிபடுகிறது என்று வைத்துக் கொண்டாலும் மேலும் இரண்டு பிரச்னைகளில் அவர் சிக்கியிருக்கிறார். கடந்த வாரங்களில் அவையும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

எரிக்ஸன் வழக்கு

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.550 கோடி தரவேண்டும். பலகட்ட விசாரணைக்குப் பிறகு இந்தத் தொகையைச் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் 15-ம் தேதிக்குள் இந்தத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று 2018 அக்டோபர் 23-ம் தேதி உத்தரவிட்டது. இந்த காலத்துக்குப் பிறகு பணத்தைச் செலுத்தும்பட்சத்தில் ஆண்டுக்கு 12 சதவிகித வட்டியுடன் கூடுதலாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்தத் தொகையை அனில் அம்பானி குழுமம் செலுத்தவில்லை.

இதுமட்டுமல்லாமல் பிப்ரவரி 1-ம் தேதி தேசிய சட்ட நிறுவன தீர்பாயத்திடம் ஆர்.காம் விண்ணப்பித்தது. அதனால் என்.சி.எல்.டி மூலம் என்ன கிடைக்குமோ அதை வாங்கிகொள்ளுமாறும், ஏற்கெனவே இருந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் அனில் குழுமம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கொதிப்படைந்த எரிக்ஸன் உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் அனில் அம்பானி ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கடந்தவாரம் அவர் நேரில் ஆஜரானார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close