ஷேர்லக்: பங்கு விலை அதிக இறக்கம்... தடுக்க செபி அதிரடி! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

ஷேர்லக்: பங்கு விலை அதிக இறக்கம்... தடுக்க செபி அதிரடி!

ஓவியம்: அரஸ்

“அவசர வேலையாக மும்பை வந்துவிட்டேன். கேள்விகளை அனுப்புங்கள் என ஷேர்லக் தகவல் அனுப்ப, உடனே நாம் கேள்விகளை அனுப்பிவைத்தோம். அடுத்த 1 மணி நேரத்தில் நம் மெயிலுக்குப் பதில்களை அனுப்பிவைத்தார் ஷேர்லக்.

கடந்த சில மாதங்களாக கடும் சரிவிலிருந்த ஜெ.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனப் பங்கின் தற்போதைய நிலை என்ன?

“ஜெ.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனப் பங்கின் விலை, கடந்த ஆறு மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 22% சரிவைச் சந்தித்தது. இந்தக் காலகட்டத்தில் சென்செக்ஸ் 9.5% அளவுக்குச் சரிந்திருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பீட்டை ‘வாங்கும் நிலை’க்கு அதிகரித்துள்ள சர்வதேச முதலீட்டு ஆலோசனை நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ், 315 ரூபாயை அதன் இலக்கு விலையாக நிர்ணயித்துள்ளது.

இதனிடையே வியாழக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 1.56% இறங்கியது. வெள்ளிக் கிழமையும் பங்கின் விலை 4.9% இறக்கம் கண்டு ரூ.266.90-ல் நிலை பெற்றது.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close