சராசரி ரிஸ்க், சராசரி வருமானம்... அக்ரெஸிவ் ஹைபிரீட் ஃபண்டுகள்!

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! - 6

- சொக்கலிங்கம் பழனியப்பன்,
 டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்  (www.prakala.com)

லப்பின ஃபண்டுகள் என ஹைபிரீட் ஃபண்டுகளை அழைக்கலாம். இந்த வகை ஃபண்டுகள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொத்து வகைகளில் முதலீட்டை மேற்கொள்கின்றன. இந்தவகை ஃபண்டுகளின் ரிஸ்க் அளவு முழுமையான ஈக்விட்டி ஃபண்டுகளைவிட குறைவு. வருமானமும் சற்று குறைவே.

ஹைபிரீட் ஃபண்டுகளை 6 அல்லது 7 வகைகளாக செபி பிரித்துள்ளது. அவற்றில் அக்ரெஸிவ் ஹைபிரீட் ஃபண்டுகளைப் பற்றி இந்த வாரம் காண்போம்.

இந்த வகை ஃபண்டுகள் முன்பு பொதுவாக பேலன்ஸ்டு ஃபண்டுகள் என்று அழைக்கப்பட்டன. தற்போதைய நிலையின்படி, இந்தவகை ஃபண்டுகள் குறைந்தபட்சம் 65%, அதிகபட்சம் 80 சதவிகிதத்தைப் பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளிலும், எஞ்சியதைக் கடன் சார்ந்த முதலீடுகளிலும் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் கடன் சார்ந்த முதலீட்டை சில ஃபண்டுகள், நீண்ட கால அரசாங்க பாண்டுகளில் வைத்துக் கொள்கின்றன. சில ஃபண்டுகள், குறுகிய கால கார்ப்பரேட் பாண்டுகளில் வைத்துக்கொள்கின்றன. அதேபோல சில ஃபண்டுகள், லார்ஜ்கேப் பங்குகளில் மட்டும் பங்கு சார்ந்த முதலீட்டை வைத்துக்கொள்கின்றன; வேறு சில ஃபண்டுகள் மிட் & ஸ்மால்கேப் பங்குகளில் அதிகமான முதலீட்டை வைத்துக்கொள்கின்றன. ஆகவே, இந்த வகை ஃபண்டுகளைத் தங்களது ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப தேர்வுசெய்ய வேண்டும்.

சென்ற ஆண்டுகளில் பல ஃபண்ட் நிறுவனங் கள், பேலன்ஸ்டு ஃபண்டுகளில் டிவிடெண்ட் டுக்கான வருமான வரி இல்லாதபோது, மாதாந்திர டிவிடெண்டை அறிமுகப்படுத்தின. அதனால்  இந்த ஃபண்டுகள் நிர்வகிக்கும் தொகை வேகமாக ஏறியது. நடப்பாண்டில் டிவிடெண்டிற்கு 10% வரி, மூலத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றவுடன், முதலீட்டாளர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள். மேலும், மாதாந்திர டிவிடெண்ட் நிரந்தரமாகத் தருவது, சந்தை இறங்குமுகத்தில் இருக்கும்போது இயலாதது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick