கமாடிட்டி... 2018-ல் எப்படி இருந்தது... 2019-ல் எப்படி இருக்கும்?

தி.ரா.அருள்ராஜன்
தலைவர், பங்குச் சந்தை,  கமாடிட்டி  சந்தை பயிற்சி மையம், www.ectra.in

மாடிட்டிச் சந்தை என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. கமாடிட்டி விலையின் மாறுதல்கள், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திப் பிடிக்கவும், சிலசமயங்களில் பொருளாதாரத்தை உலுக்கி எடுக்கவும் வாய்ப்புண்டு. இன்னொரு பக்கம், முதலீடுகளின் மதிப்பைக் காப்பாற்றவும் கமாடிட்டிச் சந்தை உதவுகிறது.

சில கமாடிட்டிகள் பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகும் பொருள்களுக்கு மூலப்பொருளாகவும் இருப்பதால், அது அந்த நிறுவனங்களின் லாபம் ஈட்டும் திறனைப் பாதிக்கவும்  வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில் அந்த நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் வலிமை பெறவும், வீழ்ச்சி அடையவும் வாய்ப்புள்ளது. கமாடிட்டியின் விலை மாற்றமானது, பணவீக்கத்துடனும் நேரடியாகத் தொடர்புகொண்டது.

கமாடிட்டிச் சந்தையைப் பொறுத்தவரை, நான்கு வகைகளாகப் பிரிப்போம். அவை, புல்லியன் (தங்கம் மற்றும் வெள்ளி), எனர்ஜி பொருள்கள் (கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு), அடிப்படை உலோகங்கள் (காப்பர், நிக்கல், அலுமினியம்…), விவசாய விளைபொருள்கள் (பருத்தி, மிளகு, ஏலக்காய்…) இந்த கமாடிட்டிகளில் நான்கு முக்கிய கமாடிட்டிகள் 2018-ல் எப்படி இருந்தது, 2019-ல் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

   தங்கம்

தங்கமானது நுகரும் ஒரு பொருள் என்றாலும், பல சமயங்களில் அதை ஒரு முதலீட்டுக் கருவியாகவே மக்கள் பார்க்கிறார்கள். அதாவது, பணவீக்கத்தைத் தாண்டி முதலீட்டைப் பாதுகாக்கவும், உலகப் பொருளாதார நிலை மந்தமாகவோ அல்லது நிச்சயமற்ற தன்மையில் இருந்தாலோ, முதலீட்டாளர்கள், தங்கள் முதலீட்டின் மதிப்பைக் காப்பாற்றவும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். 2018-ல் இவற்றின் நிலவரம் என்னவென்று பார்ப்போம்.

 தங்கம் இந்த வருடத்தில் மிகப் பெரிய மாற்றம் இல்லாமல் ஓரளவிற்கு ஒரு குறுகிய வட்டத்திலேயே சுழன்று வந்துள்ளதாகச் சொல்லலாம். இதை கேண்டில் வரைபடத்தில் பார்க்கும்போது, இது ஒரு ஸ்பின்னிங்டாப் வகையில் அமைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick