மியூச்சுவல் ஃபண்ட்... 2019 எப்படி இருக்கும்?

சுரேஷ் பார்த்தசாரதி,
myassetsconsolidation.com, SEBI Registered Investment advisor

ங்கு மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படலாம் என்கிற செய்தி 2018-ம் ஆண்டு தொடங்கும்முன்பே பரவலாக எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. மேலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களை செபி புதிதாக வகைப்படுத்தியதால், இந்தியப் பங்குச் சந்தை சற்றுத் தடுமாற ஆரம்பித்தது.

அத்துடன் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சி, வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்தது,  வங்கிசாரா நிதி நிறுவனங்களின் நிதிச் சிக்கல், அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் எனப் பல பிரச்னைகள் வந்தன. இதனால் பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கத்தை உருவாக்கியது. என்றாலும், பங்குச் சந்தை மற்றும் ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டாளர்களுக்குப் பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை.

2017-ம் ஆண்டில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் குறிப்பாக, ஸ்மால்கேப் ஃபண்டுகள் அதிக வருமானம் கொடுத்தது. இதற்குக் காரணம், ஸ்மால்கேப் பங்குகளில் பல 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக வருமானம் தந்ததுதான்.

இதை அடிப்படையாக வைத்து, 2018-ல் முதலீடு செய்தவர்கள்தான் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். ஸ்மால் கேப் ஃபண்டுகளின் என்.ஏ.வி மதிப்பு 33% இறங்கி இருக்கிறது. இது இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது.  அதேபோல,  மிட் கேப் ஃபண்டுகளை  எடுத்துக்கொண்டாலும் 18-25% வரை இறங்கி இருக்கிறது.

2018-ல் லார்ஜ்கேப் ஃபண்டுகள் சுமாராக வருமானம் தந்திருக்கிறது. அதாவது, அதன் வருமானம் வங்கி வட்டி அளவிற்குக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. லார்ஜ் கேப் பிரிவில் ஒன்பது ஃபண்டுகள்தான் பாசிட்டிவ் வருமானம் கொடுத்துள்ளன. 

ஹைபிரீட் ஃபண்டுகளில் 65%் பங்குச் சந்தையிலும், 35% கடன் சார்ந்த ஆவணங் களிலும் முதலீடு செய்தாலும் 2018-ம் ஆண்டில் பங்குச் சந்தை  இழப்பு மற்றும் கடன் சந்தை ஆவணங்கள் சுமாரான வருமானம் தந்திருக்கின்றன. இதனால் இந்தப் பிரிவில் எட்டு ஃபண்டுகள்தான் பாசிட்டிவ் வருமானம் தந்துள்ளன. இதுவும் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

லிக்விட் ஃபண்ட், அல்ட்ரா சார்ட் டேர்ம் ஃபண்டுகள் போன்ற கடன் ஃபண்டுகள் கிட்டத்தட்ட வங்கி வட்டி அளவிற்குத்தான் வருமானம் கொடுத்திருக்கின்றன. டைனமிக் பாண்ட், கிரெடிட் ரிஸ்க், ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் போன்றவையும் முதலீட்டாளர்களுக்கு  ஏமாற்றத்தைத்தான் உருவாக்கி இருக்கிறது. ஆகமொத்தத்தில்,  2018-ம் ஆண்டு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick