டார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ!

ஜி.மாறன்,
செயல் இயக்குநர், யுனிஃபை கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட்


லாபகரமாகப் பிரித்து முதலீடு செய்வது (அஸெட் அலோகேஷன்) எப்படி என்பது குறித்த எனது கருத்துகளைத் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக நாணயம் விகடன் வாசகர்களுடன் பகிர்ந்து வருகிறேன்.    

கடந்த 2018-ம் ஆண்டில் அஸெட் அலோகேஷன் குறித்து நான் விவாதித்தபோது, கீழ்க்கண்ட முக்கிய விஷயங்களைச் சொல்லியிருந்தேன்.     

1. 2012-ம் ஆண்டிலிருந்து தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டபோதிலும், 2018-ல் சரிவு ஏற்பட வாய்ப்பில்லை.

2. கூடிய விரைவில் வட்டி விகிதம் குறையும் என்பதால், குறுகியக் காலக் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு லாபகரமாக இருக்கும்.    

3. ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் கட்டாய விற்பனையை மேற்கொள்ளும் அளவுக்கு டெவலப்பர்களை நெருக்குவதால், விற்காமல் கிடக்கும் வீடுகளை விற்கும் நிலைக்கு டெவலப்பர்கள் தள்ளப்படு கிறார்கள். இதனால் ரியல் எஸ்டேட் விலை  மேலும் குறையக்கூடும்.   

4. தங்களது போர்ட்ஃபோலியோவில் 25% சரிவை ஜீரணித்துக்கொள்ள இயலாதவர்கள், அடுத்து ஒரு சரிவு ஏற்பட்டபின் வெளியேறுவதற்குப் பதிலாக இப்போதே முதலீட்டிலிருந்து வெளியேறி விடுங்கள்.   
       
நான் சொன்னது 2018-ம் ஆண்டில் எப்படிச் செயல்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

1. தங்கத்தின் விலை 5 - 8% வரையிலான ஒரு குறுகிய வரம்புக்குள்ளேயே ஏறி இறங்கியது. அதன் விலை வீழ்ச்சி அடைவது நின்றுபோனது.

2. ஆண்டின் தொடக்கத்தில் வட்டி விகிதங்களில் சரிவு ஏற்பட்டாலும், ஆண்டின் பிற்பகுதியில் உயர்ந்தது. இதன்மூலம், பெரும்பாலான சந்தை பங்கேற்பாளர்களின் எண்ணத்தைத் தவறு என நிரூபித்தது.

3. நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் விலை தொடர்ந்து சரிந்ததால், குறைவான பரிவர்த்தனை களே நடந்தன.

4. ஆதாயமோ அல்லது இழப்போ ஏற்பட வில்லை என்று பங்குச் சந்தைக் குறியீடுகள் (Benchmark Indices) காட்டியபோதிலும், ஈக்விட்டி சந்தைகளில் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick