மதுரை டு சர்வதேசம்... கே.பி.ஓ-வில் சாதிக்கும் அபராஜிதா! | KPO successfully running by Aparajitha Corporate Services - Nanayam Vikatan | நாணயம் விகடன்

மதுரை டு சர்வதேசம்... கே.பி.ஓ-வில் சாதிக்கும் அபராஜிதா!

தினெட்டு ஆண்டுகளுக்குமுன் மதுரையில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட அபராஜிதா கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனம் இன்று ஆசிய நாடுகளைத் தாண்டி, சர்வதேச அளவில் செயல்படத் தொடங்கியிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும் வளர்ச்சி. மதுரையில் இருந்துகொண்டு ஒரு கே.பி.ஓ (Knowledge process outsourcing) வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் அபராஜிதா கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நாகராஜ் கிருஷ்ணன். இந்த வளர்ச்சி எப்படிச் சாத்தியமானது என்று அவரிடமே கேட்டோம். கடந்த 18 ஆண்டுகளான தனது தொழில் வாழ்க்கையை நம்மிடம் சொன்னார்  45 வயதான நாகராஜ்.

   அபராஜிதாவின் தொடக்கம்...

‘‘நான் மதுரை மண்ணின் மைந்தன். அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தபின், முதுகலைப்படிப்பாக சோஷியல் வொர்க் படித்தேன். தியாகராஜர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ படித்தேன். படித்துமுடித்தவுடன் மதுரை டி.வி.எஸ் அண்டு சன்ஸ் நிறுவனத்தில் பெர்ஷனேல் ஆபீஸராக வேலை கிடைத்தது. நான்கு ஆண்டுகள் அங்கு வேலை பார்த்தபின், அபராஜிதா நிறுவனத்தை     2000-ம் ஆண்டில் தொடங்கினோம்.             2003 முதல் அபராஜிதா முழுவேகத்தில் செயல்படத் தொடங்கிவிட்டது.

   என்னை வளர்த்தெடுத்த பரத்...

வேலைக்குச் சேர்ந்தவுடனே தனியாகத் தொழில் தொடங்கும் எண்ணம் எனக்கு வந்துவிட வில்லை. என்னைத் தொழில் செய்யத் தூண்டியது எங்கள் நிறுவனத்தின் தலைவர் பரத்கிருஷ்ண சங்கர்தான். டி.வி.எஸ் நிறுவனத்தில் ஹெச்.ஆர் பிரிவில் நான் வேலை பார்த்தபோது, மனிதவளம் தொடர்பான பல்வேறு சட்டங்களை நடைமுறைப் படுத்தும் (Labour law compliance) வேலையைச் செய்யவேண்டியிருந்தது. அந்த வேலையை எல்லா நிறுவனங்களும் தனித்தனியாக செய்துவந்தன. இந்த வேலையை எல்லா நிறுவனங் களுக்குச்் செய்துதரும் பணியை நாம் செய்தால் என்ன என்கிற கேள்வி எனக்குள் பிறந்தது.

இந்த ஐடியாவை பரத்திடம் சொன்னபோது,  அதை முழுமையானதொரு தொழிலாக வளர்த்தெடுக்க அவர் எனக்கு வழிகாட்டினார். ஆக, என்னை ஒரு பிசினஸ்மேனாக மாற்றியது அவர்தான். என்னுடைய தொழில் பார்ட்ன ராகவும், பிசினஸ் மென்டாராகவும் அவர் எனக்கு இருந்தது வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick