ஸ்டார்ட்அப்களைக் கலவரப்படுத்தும் ஏஞ்சல் டாக்ஸ்! | Startup Companies are irritating for Angel Tax - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ஸ்டார்ட்அப்களைக் கலவரப்படுத்தும் ஏஞ்சல் டாக்ஸ்!

வாசு கார்த்தி

புனேவைச் சேர்ந்த ட்ரூ எலிமென்ட்ஸ் நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.1.5 கோடி நிதியை முதலீடாகத் திரட்டியது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அப்போது சந்தோஷமாக இருந்த இந்த விஷயம், தற்போது சிக்கலாக மாறியிருக்கிறது. இந்த முதலீட்டை வருமானமாக எடுத்துக் கொண்டு, ரூ.40 லட்சம் வரி (ஏஞ்சல் டாக்ஸ்) செலுத்த வேண்டும் என வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. பல நிறுவனங்களுக்கும் பிரிவு 56(2) கீழ் ஏஞ்சல் டாக்ஸ் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதனால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கலவரத்தில் உள்ளன.

   ஏஞ்சல் வரி என்றால்?

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐடியாவை  முதன்மையாக வைத்தே தொடங்கப்படுகின்றன. முதலீட்டு நிறுவனங்கள் இந்த ஐடியாவை நம்பி  முதலீடு செய்கின்றன. ஸ்டார்ட்அப் நிறுவனங் களின் வருமானம் ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும், எதிர்காலத்தில் அது எவ்வளவு சம்பாதிக்கும் என்பதன் அடிப்படையில் அதன் சந்தை மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்கின்றனர்.

ஆனால், இந்த மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் செய்யப்படும் முதலீட்டை  வருமான வரித்துறை வருமானமாகக் கருதத் தொடங்கியிருக்கிறது. அதாவது, சந்தை மதிப்பை விட அதிகமான நிதி திரட்டினால், அந்தத் தொகையை வருமானமாகக் கணக்கீட்டு அதற்கு 30% வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பத் தொடங்கியிருக்கிறது.

உதாரணத்துக்கு, ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.100 எனில், அந்தப் பங்குகளை ரூ.120-க்கு முதலீட்டாளரிடம் விற்கும்போது இந்தத் தொகையை முதலீடாகக் கருதாமல் வருமானமாகக் கருதப்பட்டு, ரூ.20-க்கு வரிச் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. ஏப்ரல் 2018-க்குமுன்பாக நிதி திரட்டிய நிறுவனங்களுக்கு இந்த நோட்டீஸ் செல்லும் எனத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick