2019 புத்தாண்டு... வாழ்வை வளமாக்கும் 10 நிதி, முதலீட்டு தீர்மானங்கள்!

அஞ்சலி மல்ஹோத்ரா,
தலைவர் (வாடிக்கையாளர் சேவை), மார்க்கெட்டிங் & டிஜிட்டல் அதிகாரி, அவிவா லைஃப் இன்ஷூரன்ஸ்

புத்தாண்டில் நாம் அனைவரும் ஒரு புதிய ஆரம்பத்துக்குத் தயாராகி விட்டோம். ஒவ்வொரு புத்தாண்டிலும் நாம் ஆரோக்கியமான, வளமான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற விரும்புவோம்; அதற்காக நிதி ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்வதுடன்,  நிதிரீதியாக செழிப்புடன் இருக்க முதலீடுகளைச் செய்யவும் விரும்புவோம். ஒவ்வொர் ஆண்டும் நாம் நிதித் தொடர்பான பல தீர்மானங்களை எடுத்தாலும், நம்மில் பெரும்பாலோர் அவற்றைச் சரியாகப் பின்பற்றுவதில்லை என்பதே யதார்த்தம்.

தனிநபர் நிதித் திட்டமிடுவது    (Personal finance) நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சிறப்பாகவும், வளமாகவும் இருக்க அவசியத் தேவையாக உள்ளது. நாம் உறுதியான  நிதித் தீர்மானங்களுடன் புத்தாண்டை ஆரம்பிக்கும்போது, நமது நிதி இலக்குகளை எளிதில் அடைய முடியும்.

அந்த நிதி இலக்குகள், ஓய்வுக்கால சேமிப்பை அதிகரிப்பதாகவோ அல்லது வீடு வாங்குவதற்கான முன் பணத்தை (Down payment) திரட்டு வதாகவோ அல்லது வருங்காலத்துக் கான நிதிப் பாதுகாப்புக்காக முதலீடு செய்வதாகவோ இருக்கலாம்.

கடந்த காலத்தில் புத்தாண்டுத் தீர்மானங்களை நாம் பின்பற்றாமல் இருந்திருக் கலாம். இனி இந்தப் புத்தாண்டிலிருந்தாவது புதிய நிதி இலக்குகளை வகுத்து, அவற்றை மிகுந்த கவனத்துடன் தொடர்வோம். பொருளாதார ரீதியாக வளமான வாழ்வை வாழவேண்டும் என நினைப்பவர்கள் இந்தப் புத்தாண்டு முதல்  பின்பற்ற  வேண்டிய 10 தீர்மானங்கள் இனி...

1. உங்கள் வருமானத்தை மதிப்பாய்வு செய்து, தனிப்பட்ட இலக்குகளை  நிர்ணயுங்கள்

உங்கள் சொத்து மற்றும் பொறுப்புகளைக்  (Liabilities) கணக்கெடுத்து, உங்களின் நிதிநிலையை ஆய்வு செய்யுங்கள். பணம் எப்படிச் செயல்படு கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உதாரணத்துக்கு, கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்வதைக் கட்டுப்படுத்துங்கள். இதனால் அதிக வட்டிக்கு நீங்கள் கடன் வாங்குவது குறையும். தேவையில்லாத பொருள்களை நீங்கள் வாங்குவது  குறையும். இதனால் நீங்கள் சேமிக்கும் தொகை கணிசமாக அதிகரிக்கும். இந்தச் சேமிப்பு எதற்காக என்பதைத் திட்டமிடுங்கள். உதாரணமாக, குழந்தைகளின் கல்வி, புதிய வீடு, கார் அல்லது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா செல்ல நீங்கள் திட்டமிட்டுப் பணம் சேர்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick