பங்குச் சந்தை.... 2019-ல் எப்படி இருக்கும்?

- ரெஜி தாமஸ்,
பங்குச் சந்தை நிபுணர்

சீனர்கள் தங்கள் காலண்டரில் ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு விலங்கினைக் குறித்து வைக்கிறார்கள். சீன காலண்டரின்படி, 2018-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட விலங்கு நாய். சீன காலண்டர்படி, பங்குச் சந்தையானது சில ஆண்டுகளைவிட மோசமாக இருக்கும் என்பது வரலாற்று உண்மை. கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் பங்குச் சந்தை மற்ற நாடுகளைவிட மோசமாக உள்ளது. வரும் பிப்ரவரி 15, 2019-ம் ஆண்டு முடிவடையும் ‘நாய்’ ஆண்டும், அந்த மோசமான ஆண்டுகளில் ஒன்றாகும். இந்த ‘நாய்’ ஆண்டில் ஆசிய மற்றும் அமெரிக்கப் பங்குச் சந்தைகள் சராசரியைவிடக் குறைவாகவே வருமானம் தந்துள்ளன.

உலக அளவில் பங்குச் சந்தை தந்த வருமானத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்,  இழப்புக்கும், லாபத்திற்குமான இடைவெளி மிகவும் பெரிதாக  இருக்கிறது. ஆப்பிரிக்காவிலுள்ள ஜாம்பியா நாடு 28% இழப்பைச் சந்தித்துள்ளது.  உக்ரைன் நாடு 79% வருமானத்தைத் தந்துள்ளது. வளர்ந்த நாடுகள் பலவற்றின் பங்குச் சந்தைகளில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சவுதி அரேபியா, துனீஷியா மற்றும் கானா நாடுகள் நல்ல வருமானம் தந்துள்ளன. இந்த அளவிற்கு வேறுபாடுகள் ஏற்பட பல காரணங்கள். அந்தக் காரணங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொண்டால் தான், 2019-ம் ஆண்டின் முதலீட்டு முடிவுகளை சரியாகத்  தீர்மானிக்க முடியும்.

1: வர்த்தகப் போர்கள்
அமெரிக்காவும், சீனாவும் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளன. இரு நாடுகளும் ஒன்று மற்றொன்றின் இறக்குமதிப் பொருள்களின்மீதான வரிகளை உயர்த்தியுள்ளன. எனவே, இவற்றைச் சார்ந்த தொழில்கள் மீதான பாதிப்பு உலக அளவில் தேவைக்கும், உற்பத்திக்குமான சமநிலையைப் பெரிதும் பாதித்தது. இதனால், சந்தையில் ஏற்ற இறக்கமும் முதலீட்டாளர்களுக்கு நிச்சயமற்றதன்மையும் ஏற்பட்டது. இந்த இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் இன்னும் 90 நாள்களில் அதாவது, வரும் மார்ச் 1, 2019 அன்று காலாவதியாகும் என்றும், அதற்குப் பிறகு வர்த்தக சமநிலை வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அமெரிக்கக் கூட்டாட்சியின் பணிநீக்கம், சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் போன்றவை இந்தச் செயல்பாடுகளைக் கணிசமாகக் குறைக்கக்கூடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick