ஷேர்லக்: காலாண்டு முடிவுகள்... கவனம் தேவை!

ஓவியம்: அரஸ்

முந்தின நாள் வாட்ஸ்அப்பில்  ஷேர்லக் கேட்டுக்கொண்ட படி, வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு நாம் கேள்விகளை மெயில் அனுப்பிவைத்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் அத்தனைக் கேள்விகளுக்குமான பதில்களை அனுப்பி வைத்தார் அவர்.

நிறுவனங்கள் பங்குச் சந்தை மூலம் நிதித் திரட்டுவது குறைந்துள்ளதே?

“நடப்பு 2018-ம் ஆண்டில் நிறுவனங்கள் பல்வேறு முறைகளில் பங்குச் சந்தை மூலம் திரட்டிய நிதி ரூ.63,744 கோடி யாகக் குறைந்துள்ளது. 2017-ம் காலண்டர் ஆண்டில் திரட்டப்பட்ட நிதி ரூ.1,60,032 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ), தொடர் பங்கு வெளியீடு (ஓ.எஃப்.எஸ்)  மற்றும்  தகுதி வாய்ந்த நிறுவனங்கள் (க்யூ.ஐ.பி) முறைகள் மூலமாகத் திரட்டப்பட்ட நிதி முறையே 53.89%, 40.98% மற்றும் 72.72% அளவுக்குக் குறைந்துள்ளது. 2018-ம் ஆண்டில் 24 ஐ.பி.ஓ- களின்மூலம் ரூ.30,959 ரூபாய் நிதி திரட்டியுள்ளது. முந்தைய ஆண்டில் 36 ஐ.பி.ஓ-கள்மூலம் ரூ.67,147 கோடி நிதி திரட்டப் பட்டது. அதேபோல, ஓ.எஃப்.எஸ் மூலம் ரூ.10,678 கோடி திரட்டப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.18,094 கோடியாக இருந்தது, க்யூ.ஐ.பி மூலம் முந்தைய ஆண்டில் ரூ.61,148 கோடி  திரட்டப்பட்ட நிலையில், 2018-ம் ஆண்டில் ரூ.16,677 கோடி  மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.”

அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் பதிவுகள் 2018-ல் அதிகரித்துள்ளதற்கு என்ன காரணம்?

“அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், பங்கேற்பு ஆவணங்கள் (பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ்) மூலம் இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை செபி எளிமைப்படுத்தியதன் எதிரொலியாக, 2018-ம் ஆண்டில் அவற்றின் முதலீடு வெகுவாக அதிகரித்துள்ளது. 600-க்கும் அதிகமான புதிய  அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், செபியில் இந்த ஆண்டு பதிவுசெய்துள்ளன. இது, கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பின்னர் செய்யப்பட்ட அதிகபட்ச பதிவாகும். தற்போது இந்தியாவில் 9,246 அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick