கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

தங்கம் ( மினி )

தங்கம், பங்குச் சந்தை இரண்டும் ஒரு நிச்சயமற்ற தன்மையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. கடந்த வாரங்களில் பங்குச் சந்தை வலிமைகுன்ற ஆரம்பித்த வுடன், தங்கம் மேல்நோக்கி ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றம் 19.12.2018ல் இருந்து ஆரம்பித்தது. அப்போது குறைந்தபட்ச புள்ளியாக 31021 என்ற புள்ளியில் இருந்து மேல்நோக்கி நகர ஆரம்பித்த தங்கம், 27.12.2018 அன்று உச்சமாக 31760ஐ தொட்டபின், கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்தது.  அந்தக் காலகட்டத்தில் பங்குச் சந்தை சற்றே வலிமை குன்ற ஆரம்பித்தது. ஆனால், பங்குச் சந்தை 27.12.2018 அன்று வலிமையாக மேலே திரும்ப ஆரம்பித்தது. அடுத்து, தொடர்ந்து நான்கு நாள்கள் பங்குச் சந்தை நல்ல ஏற்றத்தைக் காட்டியது. அந்தக் காலகட்டத்தில் தங்கம் படிப்படியாக இறங்க ஆரம்பித்தது.  27.12.2018 அன்று உச்சமாக 31760-ஐ தொட்ட தங்கம் இறங்கி 31.12.2018 அன்று குறைந்தபட்ச புள்ளியாக 31310-ஐ தொட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick