கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில், ஒரு ஒரு வலிமையான மற்றும் தொடர் டவுன்ட்ரெண்டில் இருந்து வருவதைக் கடந்த இதழில் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்தத் தொடர் இறக்கம் முடிவுக்கு வரவேண்டுமானால், அதற்கு ட்ரெண்ட் ரிவர்ஷல் எனப்படும் உருவமைப்போ அல்லது கேண்டில் பேட்டர்ன் தோன்ற வேண்டும். அந்த வகையில் தொடர்ந்து இறங்குமுகமாவே இருந்துவந்த மென்தா ஆயில் 24.12.2018 அன்று பெல்ட் ஹோல்ட் எனும் கேண்டில் அமைப்பு உருவாக்கி, இறக்கம் முடிவுக்கு வந்ததைக் காட்டியது. அதன்பிறகு மென்தா ஆயில் ஏறுமுகமாக மாறியது.

சென்ற வாரம் நாம் சொன்னது… “டிசம்பர் கான்ட்ராக்ட் முடியும் தருவாயில் இருப்பதால், இனி ஜனவரி கான்ட்ராக்ட்டுக்கு மாறுவோம். தற்போது 1450 என்ற எல்லையை உடனடி ஆதரவாகக் கொண்டுள்ளது. ஒருவேளை இந்த ஆதரவையும் உடைத்தால், அது பெரிய இறக்கத்திற்கு வழிவகுக்கலாம். மேலே 1520 என்பது தடைநிலை ஆகும்.”

சென்ற வாரம் மென்தா ஆயில் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1520-ஐ உடைத்து மேலே ஏற ஆரம்பித்தது. அதாவது 24.12.2018 அன்று பெல்ட் ஹோல்ட் உருவமைப்பைத் தோற்றுவித்தபிறகு, 26.12.2018 அன்று வலிமையாக ஏறி, நாம் கொடுத்திருந்த 1520 என்ற தடைநிலையை உடைத்து ஏறி உச்சமாக 1534-ஐ தொட்டது. அதன்பிறகு ஒரு பக்கவாட்டு நகர்விலிருந்து மீண்டு, வலிமையாக ஏற ஆரம்பித்து 02.01.2019 அன்று உச்சமாக 1631 என்ற புள்ளியைத் தொட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick