வரிச் சலுகை... என்னென்ன வாய்ப்புகள்?

கேள்வி - பதில்

வருமான வரிச் சட்டம் 80சி, 80டி தவிர வேறெந்த வழிகளில் வரிக்கழிவுக்கு வாய்ப்புகள் உள்ளன?

சங்கரராமன், சென்னை

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“வருமான வரிச்சட்டம் 80CCD (1B)  பிரிவுபடி, என்.பி.எஸ் முதலீட்டில் கூடுதலாக 50,000 ரூபாய்வரை வரிக்கழிவு பெறலாம்.

மூத்தக் குடிமக்கள், வருமான வரிச் சட்டம் 80-TTB பிரிவின்படி, ரூ.50,000 வரை தங்களது வங்கி, அஞ்சலக சேமிப்பின் வட்டித் தொகைக்கு வரிக்கழிவு பெறலாம்.

80E பிரிவின்படி, எட்டு ஆண்டுகள் வரை கல்விக் கடனுக்காகச் செலுத்தப்படும் வட்டியை வரிக்கழிவில் சேர்க்கலாம்.  முதல்முறையாக வீடு கட்டியவர்கள் / வாங்கியவர்கள்,  80EE பிரிவின்படி, ரூ.50,000 வரை வட்டித் தொகையை வரிக்கழிவுக்குக் காட்டலாம். அடுத்தவரைச் சார்ந்துவாழும் உடல் ஊனமுற்றவர்களில் 40-80% வரை ஊனமுற்றவர்கள் ரூ.75,000 வரையிலும், 80 சதவிகிதத்துக்கு மேல் ஊனமுற்றவர்கள் ரூ.1,25,000 வரையிலும் பிரிவு 80DDB-யின்படி மருத்துவச்செலவுகளுக்கு வரிக்கழிவு பெறலாம். உடல் ஊனத்தால் துன்பப் படுபவர்களுக்கு வருமான வரிச் சட்டம் 80U-யின் படி ரூ.75,000 வரையிலும், மிகவும் அதிகமாகத் துன்பப்படுபவர்களுக்கு ரூ.1,25,000 வரையிலும் வருமான வரிக்கழிவு உண்டு.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick