மதுரையில் சங்கமம்... தமிழால் இணைந்த தொழில் அதிபர்கள்!

மிழகத்தைச் சேர்ந்த பல ஜாம்பவான்கள், வெளிநாடுகளில் பெரும்பதவிகளை வகித்தும், வெற்றிகரமாகத் தொழில் செய்தும் வருகிறார்கள். தாய்நாட்டுக்குத் தங்கள் நன்றிக்கடனை எப்படிச் செலுத்தப் போகிறோம் என்கிற சிந்தனை இவர்களுக்கு அடிக்கடி வந்துசெல்வதுண்டு. இந்த எண்ணத்தைப் பூர்த்திசெய்யும்விதமாக, மதுரையில் அனைத்துலகத் தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு கடந்த டிசம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடந்தது. ‘எழுமின்’ (The Rise) என்கிற பெயரில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டுக்கு நானூறுக்கும் அதிகமானவர்கள் வந்திருந்தனர்.

தொழில் துறையில் இருப்பவர்கள் தங்களின் தொழிலை வலுப்படுத்தவும், புதிய உத்திகளைக் கற்றுக்கொள்ளவும், வெற்றியின் ரகசியங்களைக் கற்றுக்கொள்ளவும் இந்த மாநாடு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியது. வெளிநாடுகளில் உள்ள சிறந்த தொழில்களைத்  தமிழகத்துக்குக் கொண்டுவரவும், தமிழகத்தில் சிறந்துவிளங்கும்  தொழிலை வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்வது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டுக் குழுவின் தலைவரும் ஹரியானா மாநில தலைமைச் செயலாளருமான தேவசகாயம் ஐ.ஏ.எஸ் இந்த மாநாடு குறித்துப் பேசுகையில், ``உலகப் பொருளாதாரச் சூழல் வேகமாக மாறி வருகிறது. படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அவர்களுக்கு  நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமெனில், தொழில்முனைதலைத் தமிழரிடையே ஊக்கப்படுத்தி விரைவாக வளர்க்க வேண்டும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick